சுடச்சுட

  
  arrest

   

  சென்னை: சென்னை ஓட்டேரியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

  சென்னை ஓட்டேரியினைச் சேர்ந்தவர் சாகுல் ஹமித். இவரை இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  கைது செய்யப்பட்டுள்ள சாகுல் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

  இதேபோல கடந்த மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai