காவிரி மகா புஷ்கர விழா நிறைவு: 20 லட்சம் பேர் புனித நீராடல்

காவிரி மகா புஷ்கர விழா நிறைவு: 20 லட்சம் பேர் புனித நீராடல்

காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவரி ஆற்றில் கடந்த 12 நாள்களில் 20 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர்.

காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவரி ஆற்றில் கடந்த 12 நாள்களில் 20 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர். மேலும், ஆதிநாயகப் பெருமாள் திருக்கல்யாணத்துடன் சனிக்கிழமை விழா நிறைவுபெற்றது.
144 ஆண்டுகளுக்கு பிறகு துலாம் ராசிக்குரிய காவிரியில் குரு பகவான் கடந்த 12ஆம் தேதி சஞ்சரித்தார். இதனை புஷ்கரம் என்று அழைக்கப்படுகிறது.
இதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு தினமும் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் நீராடினர். கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த காவிரி மகா புஷ்கர விழா சனிக்கிழமை காலை தசாவதார இஷ்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். காலை 11 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு காவிரி தாய்க்கு மகா பூரண நட்சத்திர ஹாரத்தி வழிபாடு நடைபெற்றது. 
இதையடுத்து இரவு 7 மணிக்கு ஆதி நாயகி தாயார், ஆதி நாயக பெருமாள் திருக்கல்யாண உற்ஸவ விழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
விழாவின் கடைசி ஓரிரு தினங்களில் உள்ளூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புனித நீராட காவிரி ஆற்றில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழா நடைபெற்ற 12 நாள்களிலும் சுமார் 20 லட்சம் பேர் புனித நீராடியதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com