பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

எஸ்சி, எஸ்டி தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. 

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 4:31 am IST

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. 
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கருத்து தெரிவித்தது. மேலும், இச்சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி அல்லது தனிநபரை உடனடியாகக் கைது செய்யக் கூடாது. உயரதிகாரிகளின் அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும். முதல்கட்ட விசாரணையை டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும். அதன்பிறகு புகாரில் அடிப்படை ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம். பொய்ப் புகார்கள் மூலம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
இத்தீர்ப்புக் கு எதிராக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அந்த சட்டப் பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், நாட்டில் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி கேரளம் ஏற்கெனவே மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரும் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 
இதன்படி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு மனு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சமூகத்தின் பாதுகாவலராக மாநில அரசு விளங்குகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டி இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.