ஆன்லைன் பணப் பரிவர்த்தனை: பழனி கோயில் இணைய முகவரி, ஒப்பந்த நிறுவனம் மாற்றம்

பழனி மலைக்கோயிலில் அறைகள் முன்பதிவு, காணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணபரிவர்த்தனைகளுக்கான கோயிலின் இணைய தள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை: பழனி கோயில் இணைய முகவரி, ஒப்பந்த நிறுவனம் மாற்றம்
Published on
Updated on
1 min read

பழனி மலைக்கோயிலில் அறைகள் முன்பதிவு, காணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணபரிவர்த்தனைகளுக்கான கோயிலின் இணைய தள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணபரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் புதிய நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கும் ஆன்லைன் எனப்படும் இணைய தளம் வழியாக அறைகள் முன்பதிவு, தரிசனம் முன்பதிவு,  இ.காணிக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஐ ஸ்கை என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தது.  
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்து கோயில்களின் இணைய வசதிகளும் திடீரென நிறுத்தப்பட்டது. இந் நிறுவனமானது பலநூறு கோடி முறைகேடு செய்திருந்தாக புகார் எழுந்ததால் கோயில்களின் இணையவசதிகளை முடக்கியதாகவும் தகவல்கள் வெளியானது.  இது குறித்து திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் செய்தார். இந்நிலையில் இணையம் முடக்கப்பட்டதால் பக்தர்கள் பலரும் சிரமப்பட்டு வந்த நிலையில், தற்போது பழனி கோயிலின் இணையதளம் p​a‌l​a‌n‌i‌m‌u‌r‌u‌g​a‌n‌t‌e‌m‌p‌l‌e.‌o‌r‌g  என்ற பெயரில் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. 
இந்த இணையத்தை கும்பகோணத்தை சேர்ந்த அண்ணா சிலிக்கான் டெக்னாலஜி என்ற நிறுவனம் பராமரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது.  இந்த நிறுவனம் தற்போது சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளது. 
எனினும் வருங்காலங்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையே இந்த இணையத்தை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.