முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது உடன் திமுக தொண்டர்கள் கண்ணீருடன் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து செல்கின்றனர்.
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடல் நள்ளிரவு 1 மணி வரை வைக்கப்படும். அதன் பின் சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரை வைக்கப்படுகிறது.
அதன்பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பிற்காக கோபாலபுரம் இல்லத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.