முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திமுக செயல் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் (93) கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர், சிறுநீரக பாதை தொற்று, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது.
இதனிடையே முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திமுக செயல் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வாஜ்பாய் உடல்நலக் குறைவு என்ற செய்தியை கேட்டதும் மிகவும் கவலை அடைந்தேன் எனவும் அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.