மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வீரராகவர் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் புரட்டாசி அமாவசையையொட்டி தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தார். 

News image

திருவள்ளூர் வீரராகவர்  திருக்கோயிலில் வழிபாடு மேற்கொள்ள வந்த பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :9 அக்டோபர் 2018, 3:06 am IST


திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் புரட்டாசி அமாவசையையொட்டி தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தார். 
இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. அதோடு இங்கு வழிபாடு செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பதோடு நிறைவேறாத காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், இக்கோயிலுக்கு முக்கிய அமாவசை நாள்களில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். 
இந்நிலையில், மகாளய அமாவாசை நாளையொட்டி வீரராகவர் கோயிலுக்கு விஜயகாந்த் பிரேமலதா திங்கள்கிழமை மாலை வந்தார். அதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் சிறப்பு தரிசன வழியாகச் சென்று மூலவரை தரிசனம் செய்தார். பின்னர் திருக்குளத்திற்கு சென்று பால், வெல்லம் ஆகியவற்றைக் கரைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து அங்கு வழிபாடு செய்வதற்கு வந்த திருநங்கைகளிடம் கலந்துரையாடினார். 
அப்போது, தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், ஆயில் சரவணன், மணிகண்டன், கீழனூர் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.