ஆந்திரத்தில் பந்த்: வேலூர், திருத்தணியில் பேருந்துகள் நிறுத்தம்

ஆந்திர மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காரணமாக, அந்த மாநிலத்துக்குச் செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள், சரக்கு

ஆந்திர மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காரணமாக, அந்த மாநிலத்துக்குச் செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் வேலூர், திருத்தணியில் நிறுத்தப்பட்டன.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, அம்மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லக்கூடிய தமிழக அரசு, தனியார் பேருந்துகள் அனைத்தும் எல்லைப் பகுதியான வேலூர் பேருந்து நிலையத்திலும், காட்பாடியிலும் நிறுத்தப்பட்டன. இதேபோல், அந்த மாநிலத்திலிருந்து இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், திருப்பதி செல்லும் பக்தர்கள், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வரக்கூடிய வணிகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். 
திருத்தணியில் இருந்து ஆந்திர மாநிலத்தின் திருப்பதி, புத்தூர், நகரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் திங்கள்கிழமை திருத்தணி பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் வேலைக்காக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாயினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com