திருத்தணியில் ஆடிக் கிருத்திகை

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிக்கிருத்திகை விழாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டனர்.
திருத்தணியில் ஆடிக் கிருத்திகை

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிக்கிருத்திகை விழாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஆறுபடை வீடுகளில் 5 -ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகை விழா, வெள்ளிக்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. சனிக்கிழமை ஆடி பரணியும், ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகை திருவிழாவும் நடைபெற்றது. விழாவையொட்டி, தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், கார்,வேன், லாரி, பஸ் மற்றும் ரயில்கள் மூலம் திருத்தணிக்கு காவடிகளுடன் வந்து குவிந்தனர். பல்வேறு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்து, உடல் முழுவதும் வேல், அலகு குத்தி, மயில்காவடி, புஷ்பக்காவடி, பால்காவடிகள், பம்பை உடுக்கையுடன் பக்திப் பாடல்களை பாடிய வண்ணம் படிகள் ஏறி மலைக்கோயிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொதுவழியில் 8 மணி நேரம் வரை 5 வரிசைகளில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். ஆடிக்கிருத்திகை விழாவில் மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 
தொடர்ந்து, பச்சை மாணிக்க மரகதக் கல், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
அதைத்தொடர்ந்து, காவடி மண்படத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com