சுடச்சுட

  

  கல்லீரல்-கணைய பாதிப்பு அறிகுறிகள் முன்கூட்டியே தெரியாது: நிபுணர்கள் தகவல்

  By DIN  |   Published on : 19th August 2018 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கல்லீரல், கணைய பாதிப்பு அறிகுறிகள் முன்கூட்டியே தெரியாது என்று சென்னை மியாட் மருத்துவமனையின் கல்லீரல்-கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
  கல்லீரல், கணையத்தை பாதிக்கும் நோய்கள், நவீன பரிசோதனை முறைகள், நவீன சிகிச்சை முறைகள் குறித்த 
  இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை மியாட் மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு மியாட் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஆர்.சுரேந்திரன், இரைப்பை-குடல் மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஏ.முரளி, மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:-
  கல்லீரல், கணைய பாதிப்புகளுக்கு வாழ்க்கை முறையே முக்கிய காரணம். ரத்தத்தில் கொழுப்புச் சத்து சேருதல், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், ஹெபடைடிஸ் ஏ, பி, சி வைரஸ் தாக்குதல் ஆகியவை காரணமாக கல்லீரல், கணையத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக கல்லீரலில் கொழுப்புச் சத்து சேர்வதால், கல்லீரல் சுருக்க நோய் (சிர்ரோஸிஸ் ஆஃப் தி லிவர்') ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 
  கல்லீரல், கணைய பாதிப்புகள் ஏற்படும் நிலையில், அறிகுறிகள் முன்கூட்டியே வெளிப்படாமல் இருக்கும்; இதனால் நோய் முற்றிய நிலையில்தான் பெரும்பாலானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். நோய் முற்றும் நிலையில் சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
  சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 43 கல்லீரல், கணைய சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கின் முதல் நாளான சனிக்கிழமை பங்கேற்று, 400 இளம் மருத்துவர்களுக்கு கல்லீரல், கணைய பாதிப்புக்கு உரிய நவீன சிகிச்சை முறைகளை விளக்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai