திருத்தணியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

திருத்தணி அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருத்தணியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

திருத்தணி அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 திருத்தணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு ஒரு சிலை ரூ.100 முதல் ரூ.15 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
 இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 அதன் ஒரு பகுதியாக, திருத்தணி சேகர்வர்மா நகர், பெரியார் நகர், சித்தூர் சாலை, கே.ஜி.கண்டிகையில் 8 பேர் கொண்ட குழுவினர் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
 சுமார் 1 அடி முதல் 2 அடி வரை மண் சிலையாகவும், 3 அடிக்கு மேல் 12 அடி வரை பேப்பர் மோல்டு சிலைகளையும் தயாரித்து வருகின்றனர்.
 மேலும், தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய வாட்டர் கலர் பெயிண்ட் மூலம் பல வண்ணங்களில் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். இங்கு, கற்பக விநாயகர், வேட்டை விநாயகர், கருட விநாயகர், அரியணையில் முண்டாசுகட்டி அமர்ந்த விநாயகர், ஆஞ்சநேயர்- நரசிம்மர்- விநாயகர் உள்ளிட்ட மூன்று தலையுடன் கூடிய புதிய விநாயகர் என 10 க்கும் மேற்பட்ட வகைகளில் விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 இச்சிலைகள் திருத்தணி - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பலரும், விநாயகர் சிலையினை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
 இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிப்பாளர் ஜாகிர் கூறுகையில், இங்கு தயாராகும் மண் சிலைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரையிலும், 3 அடிக்கு மேல் 12 அடி வரை உள்ள சிலைகள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதால் சிலை தயாரிக்கும் மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விநாயகர் சிலையின் விலை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com