திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு: தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு: தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை பொதுச் செயலாளர் அன்பழகன் முறைப்படி அறிவித்தார். திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வானார். இதன்மூலம், திமுகவின் 2-வது தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்கள் ஆடிப் பாடியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் சாலை சென்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com