புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 அமைச்சர்கள் முகாம்: முழுவீச்சில் மீட்புப் பணிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் 5 தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 அமைச்சர்கள் முகாம்: முழுவீச்சில் மீட்புப் பணிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் 5 தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
 கஜா புயலைத் தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் நவ. 16- ஆம் தேதி தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பா. பெஞ்சமின் ஆகிய 5 அமைச்சர்களும் முகாமிட்டு புயல் பாதிப்பு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
 கணக்கெடுப்புப் பணி: இதனிடையே புயல் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்புப் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
 இம்மாவட்டத்தில் 181 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, 83 கிராமங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 மீதமுள்ள 75 கிராமங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், கே.பி. அன்பழகன், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
 வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், சார்ஆட்சியர் கமல்கிஷோர், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 மீட்புப் பணிகள்: புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தோப்புத்துறை ஆறுமுச்சந்தி, வாய்மேடு மேற்கு உதயராஜபுரம் பகுதிகளுக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் மின் சீரமைப்புப் பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ஓரடியாம்புலம் ஜீவா நகர், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்யாபுரம், தாலையாழமழை, சின்னத்தும்பூர், கிராமத்துமேடு ஆகிய பகுதிகளுக்குச் சென்று, வீடுகள், குடிசைகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
 இதைத்தொடர்ந்து, வேளாங்கண்ணி, செருதூர் மீனவக் கிராமங்களுக்குச் சென்று புயல் பாதுகாப்பு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மீனவ மக்களுக்கும் ஆறுதல் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com