வேண்டா விருந்தாளியாக திமுகவில் கூட்டணி வைக்க நினைக்கிறார் வைகோ: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு  

வேண்டா விருந்தாளியாக திமுகவில் எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வைகோ நினைக்கிறார் என்றும் அவரது செயல்
வேண்டா விருந்தாளியாக திமுகவில் கூட்டணி வைக்க நினைக்கிறார் வைகோ: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு  

கோவை: வேண்டா விருந்தாளியாக திமுகவில் எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வைகோ நினைக்கிறார் என்றும் அவரது செயல் மதிமுக தலைவர்களை தலைகுனிய வைத்துள்ளது என மத்திய இமையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மதிமுக பொதுச்செயலர் வைகோ மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு எதிராக நடத்தப்பட்டதை கண்டித்து திமுகவில் இருந்து வெளியேறினார். எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் களத்தில் இறங்கி உள்ளார். வைகோ மீதான நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியதாகவும மாற்றி உள்ளது.

பிரதமர் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகள் யாரையோ திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காகவும் சொல்லி உள்ளார். எதுவாக இருந்தாலும் வைகோவின் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

பிரதமர் தமிழகம் வருவார், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தருவார். எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தேவையற்ற முறையில் வார்த்தைகளை கூற வேண்டாம் என நான் வைகோவுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

மேலும், யாரையோ திருப்திபடுத்த, யாரையாவது அவமானப்படுத்த வேண்டாம். அது தமிழகத்தில் நடக்காது என்றவர் அவருடைய பேச்சு மதிமுக தலைவர்களை தலைகுனிய வைத்துள்ளது.

வேண்டா விருந்தாளியாக எப்படியாவது திமுகவுடன் கூட்டணியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. திமுகவில் உள்ளவர்கள் மதிமுகவை ஏளனமாக பார்க்கின்றனர்.

மேக்கேதாட்டுவில் அணை கட்ட ஆய்வறிக்கைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படும் வகையில் அந்த ஆய்வறிக்கை அமையாது என நம்புகிறேன். மேக்கேதாட்டுவில் கர்நாடக அணை கட்டுவதற்கு முழு எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம் என ராதாகிருஷ்ணன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com