பொன் மாணிக்கவேல் மீதான மேல்முறையீடு தமிழக அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்: இல.கணேசன்

பொன் மாணிக்கவேல் பணிநீட்டிப்புக்கு எதிரான மேல்முறையீடு தமிழக அரசு மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
பொன் மாணிக்கவேல் மீதான மேல்முறையீடு தமிழக அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்: இல.கணேசன்

பொன் மாணிக்கவேல் பணிநீட்டிப்புக்கு எதிரான மேல்முறையீடு தமிழக அரசு மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய பாஜக அரசு தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி புதிய அணை கட்ட முடியாது என ஆணையத் தலைவா் தெளிவுபடுத்தி உள்ளாா். 

பிரதமா் மோடிக்கு நாடு முழுவதும் செல்ல உரிமை உள்ளது. அதைத் தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அவா் தமிழகத்துக்கும் வந்து பிரசாரம் செய்வாா். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் ஆய்வுக் குழு, அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்துள்ளது. 

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக இருந்து ஓய்வுபெற்றற பொன் மாணிக்கவேலின் பணிநீட்டிப்பு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது, அரசு மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். மேல்முறையீட்டைத் திரும்பப் பெறாவிட்டால், இந்த அரசை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டாா்கள் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com