மின்சார என்ஜினாக மாறிய டீசல் என்ஜின்: ரயில்வே சாதனை

ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்கும் நோக்கில், ரயிலின் டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இந்திய ரயில்வே வாரியம் சாதனை படைத்துள்ளது.
வாராணசி பணிமனையில், டீசல் என்ஜினிலிருந்து மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றப்பட்ட ரயில் என்ஜின்.
வாராணசி பணிமனையில், டீசல் என்ஜினிலிருந்து மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றப்பட்ட ரயில் என்ஜின்.


ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்கும் நோக்கில், ரயிலின் டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இந்திய ரயில்வே வாரியம் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டீசல் என்ஜின் கொண்ட ரயிலை பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இயக்க வேண்டுமானால், ரூ.5-6 கோடி செலவில், அதனைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆனால், அதில் பாதித்தொகையை மட்டும் செலவிட்டு, டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றிவிட முடியும். 
அப்படி மாற்றிவிட்டால், சுமார் 2700 குதிரைத்திறன் கொண்ட டீசல் என்ஜினின் ஆற்றல், சுமார் 5000 குதிரைத்திறனாக அதிகரிக்கும். இத்துடன், ரயில்வேயின் எரிபொருள் செலவும் குறையும்.
மேலும், ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்கும் நோக்கிலும், கார்பன் வெளியீட்டை முழுவதுமாகக் குறைக்கும் நோக்கிலும் டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றும் முயற்சியில், வாராணசியிலுள்ள டீசல் என்ஜின் பணிமனை ஈடுபட்டு வந்தது. 
இதற்கான பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கின. அந்தப் பணிகள் 69 நாள்களில் முடிவடைந்து, ரயிலின் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன.
இந்நிலையில், அந்த மின்சார என்ஜினுக்கு ரயில்வே வாரியம் கடந்த மாதம் 27-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மின்சார என்ஜினைக் கொண்ட ரயில் வாராணசியில் இருந்து லூதியாணா வரை கடந்த 3-ஆம் தேதி இயக்கப்பட்டது. உலக அளவில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com