5 மாநிலத் தேர்தல்: பக்லாமுகி கோயிலுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் மத்தியப் பிரதேச வேட்பாளர்கள் பக்லாமுகி கோயிலுக்குப் படையெடுக்கின்றனர்.
5 மாநிலத் தேர்தல்: பக்லாமுகி கோயிலுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்


போபால்: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் மத்தியப் பிரதேச வேட்பாளர்கள் பக்லாமுகி கோயிலுக்குப் படையெடுக்கின்றனர்.

குறிப்பாக இந்த கோயிலுக்கு வேட்பாளர்கள் படையெடுக்கக் காரணம், கௌரவர்களுக்கு எதிராக போரின் போது யுதிஷ்டர் இங்கு யாகம் செய்தே வெற்றி பெற்றதாக புராணம் கூறுகிறது.

இதன் அடிப்படையில், தங்களது எதிரிகளை வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மத்தியப் பிரதேச வேட்பாளர்கள் இந்த கோயிலுக்குப் படையெடுக்கிறார்கள்.

இந்த கோயிலில் இருக்கும் குருமார்கள் தினந்தோறும் வரும் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசியல் தலைவர்களுக்கு சிறப்புப் பூஜைகளும், யாகங்களும் செய்த வண்ணம் உள்ளனர். 

இதில் விசேஷத் தகவல் என்னவென்றால் மத்தியப் பிரதேச மாநில வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான சட்டீஸ்கர், ராஜஸ்தான் வேட்பாளர்களும் இந்த கோயிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com