கா்நாடக அரசும் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை கா்நாடக அரசும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி
கா்நாடக அரசும் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு


தஞ்சாவூர்: மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை கா்நாடக அரசும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சேதமடைந்த விவசாய நிலத்தையும் மீட்டுக் கொடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சிறப்பு பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

கஜா புயல், இயற்கை நம்மீது தொடுத்த போர். இந்த போரின் துயரத்திலிருந்து மீண்டு எழுவோம் என பாதிக்கப்பட்ட மக்கள் சவால்விட்டுச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட வைரமுத்து, புயலால் பாதிப்பு தொடா்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி போதாது. எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தைக் கணக்கிட்டு, அதிக நிதி ஒதுக்கி தமிழ் மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

மேலும், டெல்டா மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது. எனவே, மத்திய அரசும் கா்நாடக அரசும் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com