தமிழர்களே.. இன்னும் 7 நாட்கள் காத்திருந்தே ஆக வேண்டும்!

சில்லென்ற காற்றும், பனி மூட்டமும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களே.. இன்னும் 7 நாட்கள் காத்திருந்தே ஆக வேண்டும்!


சில்லென்ற காற்றும், பனி மூட்டமும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டுதான் பருவ மழை பொய்த்து தண்ணீருக்காக ஓட வைத்தது. இந்த ஆண்டும் இதுவரை போதிய மழை பெய்யவில்லை. இன்னும் டிசம்பர் மாதத்தில் இருப்பது வெறும் 20 நாட்கள்தான். அதற்குள் எவ்வளவு மழை பெய்யும். போதுமான அளவுக்கு மழை இருக்குமா என்று கலங்கி நிற்கிறார்கள் மக்கள்.

எப்போது மழை பெய்யும் என்று காத்திருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டிருக்கும் பதிலில், தற்போதைய வானிலை மாற டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரை காத்திருந்துதான் ஆக வேண்டும். இன்னும் 7 நாட்கள் செல்ல வேண்டும். பர்மா, ஒடிசா, ஆந்திராவில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து அறிந்திருப்பீர்கள். இதில் ஒரே ஒரு கேள்விதான், தற்போது இருக்கிறது, அது என்னவென்றால் தமிழகத்துக்கு அது எப்படி வரப்போகிறது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகவா? மண்டலமாகவா? அல்லது புயலாகவா? என்பதே அது.

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு வரும் வகையில் வானிலை மாறும் வரை காத்திருப்பு தான் அவசியம். அதுவரை என்ன செய்வது என்று கேட்க வேண்டாம், ஊடகங்களில் மழை பற்றி வரும் சற்று உப்புக் காரம் சேர்க்கப்பட்ட செய்திகளைப் படித்துக் கொண்டிருங்கள்.

விரைவில் மழை பற்றிய தகவல்களோடு சந்திக்கிறேன். டிசம்பர் 14 / 15ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com