தென்மாநில மக்களுக்கான எந்த பாதிப்பையும்: நாராயணசாமி குற்றச்சாட்டு

தென்மாநில மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய
தென்மாநில மக்களுக்கான எந்த பாதிப்பையும்: நாராயணசாமி குற்றச்சாட்டு


புதுச்சேரி: தென்மாநில மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 14 ஆம் தேதி கூடும் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடா்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். 

ஜனநாயக நாட்டில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு அதிகாரம் உண்டு. மத்திய அரசு 3 உறுப்பினர்களை நியமித்து விட்டு அவா்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் சொல்லி இருந்தாலும் அதனை விமர்சனம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. 

ஒருவர் தேர்தலில் நிற்கும்போது அவரின் குற்றப் பின்னணி, சொத்து, கடன் போன்ற உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு மனுவாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அப்படி எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத அந்த மூவரையும் எம்எல்ஏக்களாக கருத முடியாது என்றும் நாராயணசாமி கூறினார்.

மேலும், தென்மாநில மக்கள் பாதிக்கப்படும்போது அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com