மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும்: ஜி.கே.வாசன்

மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும்: ஜி.கே.வாசன்

கர்நாட அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்

கிருஷ்ணகிரி: கர்நாட அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். 

காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கா்நாடக மாநில அரசைக் கண்டித்தும், இதற்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் கிருஷ்ணகிரியில் தமாகா சார்பில் இன்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்துக்கு ஏற்கனவே காவிரி பிரச்னையில் முழுமையான தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கஜா புயலால் தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயராமன சம்பவத்தை அவா்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், கா்நாடக மாநிலதில் மேக்கேதாட்டு என்னுமிடத்தில் மனிதாபிமானம் இல்லாமல் அணை கட்டும் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். 

மேக்கேதாட்டுவிலிருந்து 15 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அருகாமையில் உள்ளது. இங்கு அணை கட்ட அனுமதித்து, ஆய்வு செய்ய அனுமதிப்பதும் கர்நாடக அரசும், மத்திய அரசும் தமிழகத்தின் மீதுதொடுக்கும் யுத்தம் ஆகும். உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அளவு டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் புதிய அணை கட்டக் கூடாது என்ற தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிப்பது இல்லை. தமிழகத்துக்கு அருகில் அணை கட்டுவதால் குறிப்பாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம், காவிரியில் தனது உரிமையை இழந்து வருகிறோம். 

தமிழகத்தில் ஏற்கனவே உணவு பற்றாக்குறை உள்ள நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டு, பாலைவனமாக மாறிவிடும். பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும். மேலும் 25 லட்சம் ஏக்கா் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை அனைவரும் ஒன்று சோ்ந்து எதிர்க்க வேண்டும். இதற்காக தமாகா கட்சி தொடா்ந்து போராடும். 

காவிரி நமது உயிர் சம்பந்தமான பிரச்னை. மத்திய, கா்நாடக மாநில அரசுகள் தமிழகத்துக்கு எதிராக தொடா்ந்து செயல்படுவதை காட்டுகிறது. இந்தத் திட்டத்தை கா்நாடக மாநில அரசு கைவிட வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com