செவிலியர் சீருடையில் மாற்றம்: அரசாணை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் மாற்றம் குறித்த அரசாணையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் மாற்றம் குறித்த அரசாணையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
 தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினருடான கூட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் செவிலியர்களின் சீருடையில் மாற்றம் செய்ய வேண்டும் என செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 இதுதொடர்பாக மருத்துவம், ஊரக சுகாதாரப் பணிகள் துறை இயக்குநர் தலைமையில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறை இயக்குநர், செவிலியர்கள் சங்கத்தின் தலைவர், செயலர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு செவிலியர்கள் சீருடை மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, செவிலியர் சீருடையில் தற்போது மாற்றம் செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 புதிய சீருடை: பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குள் ஆன செவிலியர்களுக்கு வெள்ளை, இளஞ்சிவப்பு நிறத்திலான தொப்பி, தமிழ்நாடு அரசு செவிலியர்களின் இலட்சினையுடன் அரைக் கை சட்டை, அதன் அடிப்பாகத்தில் இரண்டு பாக்கெட்டுகள், வெள்ளை நிறத்திலான பாக்கெட்டுகள் இல்லாத முழுக் கால் சட்டை, வெள்ளை நிற சாக்ஸ், ஷூ உள்ளிட்ட மாற்றங்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு வெள்ளை, இளஞ்சிவப்பு நிறத்திலான தொப்பி, வெள்ளை நிற கால் சட்டையுடன் கூடிய அரைக் கை சுடிதார், செவிலியர்களின் இலட்சினையுடன், அடிப்பாகத்தில் இரண்டு பாக்கெட்டுகளுடன் கூடிய ஓவர் கோட், வெள்ளை நிற சாக்ஸ், ஷூ உள்ளிட்ட மாற்றங்களும், இரண்டாம் நிலை கண்காணிப்பு செவிலியர்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலான புடவை, செவிலியர்களின் இலட்சினையுடன், அடிப்பாகத்தில் இரண்டு பாக்கெட்டுகளுடன் கூடிய ஓவர் கோட், வெள்ளை நிற சாக்ஸ், ஷூ உள்ளிட்ட மாற்றங்களும், முதல் நிலை கண்காணிப்பு செவிலியர்களுக்கு பிஸ்தா பச்சை நிறத்திலான சேலையும், செவிலியர்களின் இலட்சினையுடன், அடிப்பாகத்தில் இரண்டு பாக்கெட்டுகளுடன் கூடிய ஓவர் கோட்,வெள்ளை நிற சாக்ஸ், ஷூ உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நன்றி தெரிவிப்பு: இந்த தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com