தமிழகம் முழுவதும் ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்படும்: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்படும்: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்படும். இதற்கான அரசு உத்தரவு, ஆங்கிலப் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
 சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள "வீர சுதந்திரம்' கண்காட்சியை சனிக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:-
 தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும். உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை "ட்ரிப்ளிகேன்' எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையும். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் உயர்நிலைக்குழு, ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி தமிழ் ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் அதன் ஒலிக் குறிப்பு மாறாது அமைக்கப்படும். பெயர் மாற்றப்படும் ஊர்களில் வேதாரண்யம், சீர்காழி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், விருத்தாசலம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சேலம், விருதுநகர், ராமேஸ்வரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களும் அடங்கலாம். இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளது.
 32 மொழிகளில் பாரதி படைப்புகள்: மகாகவி பாரதியின் தலைசிறந்த படைப்புகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் அரபு, சீனம் உள்ளிட்ட 32 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் கவிஞர்களில் பாரதியின் படைப்புகளே அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 திருக்குறள் இருக்கக்கூடிய எல்லா மொழிகளிலும் பாரதியைக் கொண்டு சேர்க்கும் புனித பணியை தமிழ் வளர்ச்சித்துறை செயல்படுத்தும். பாரதி ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் சென்றடையவேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்திலும் சென்றடையவேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி போன்று பாரதிக்கும் சிறப்புச் செய்ய இந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுக்கும். அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள "வீர சுதந்திரம்' கண்காட்சியை 40 ஆயிரம் மாணவர்கள் பார்வையிடுவர் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com