மு.க.ஸ்டாலின் இன்று தில்லி பயணம்

பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திப்பதற்காகவும்
மு.க.ஸ்டாலின் இன்று தில்லி பயணம்

பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திப்பதற்காகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச.9) தில்லி செல்ல உள்ளார்.
 சோனியா காந்தி தனது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாட உள்ளார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மூலம் தில்லி செல்ல உள்ளார்.
 சோனியா காந்தியை அவரது இல்லத்தில் காலை 11.30-மணியளவில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை டிசம்பர் 16-ஆம் தேதி சோனியாகாந்தி திறந்து வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழையும் அவரிடம் அளிக்க உள்ளார்.
 எதிர்க்கட்சி கூட்டம்: பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் தில்லியில் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்க உள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com