"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட 3.90 லட்சம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க ஏற்பாடு: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ

மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3.90 லட்சம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்
பழனியில் கூட்டுறவு சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள புதிய பெட்ரோல் விற்பனை நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கி வைக்கும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கூட்டுற
பழனியில் கூட்டுறவு சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள புதிய பெட்ரோல் விற்பனை நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கி வைக்கும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கூட்டுற

மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3.90 லட்சம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியது: விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் 38 ஆயிரம் கோடிக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்குதல், 178 பொதுச்சேவை மையங்கள் மூலம் சாதிச்சான்று, பட்டா, சிட்டா, அடையாள அட்டை வழங்குதல், 282 அம்மா மருந்தகங்கள் மூலம் 20சதவீத தள்ளுபடியில் 739 கோடிக்கு மருந்துகள் விற்பனை என பல்வேறு நலத் திட்டங்களை கூட்டுறவுத்துறை செயல்படுத்தி வருகிறது. மேலும் கஜா புயலின் போது தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை பணிபுரிந்து மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3.90 லட்சம் விவசாயிகள் நிவாரணம் பெற வழிவகை செய்தனர். இதனால் இவர்களுக்கு மாநில அரசின் நிவாரணமும், மத்திய அரசின் காப்பீட்டுத் தொகையும் என ஏக்கருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் அமைச்சர் சி.சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், எம்.பி., உதயகுமார், மதுரை மண்டல இணைப்பதிவாளர் ராஜேஷ், திண்டுக்கல் மண்டல இணை பதிவாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com