பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் - திமுக கூட்டணி: சோனியா

பாஜக ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் - திமுக இணைந்து செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் வீரவாள்களுடன் சோனியா காந்தி,  ராகுல் காந்தி,  மு.க.ஸ்டாலின்,  சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன்,   வி.நாராயணசாமி.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் வீரவாள்களுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், வி.நாராயணசாமி.

பாஜக ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் - திமுக இணைந்து செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது:
இந்தியாவின் தலைசிறந்த மனிதர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். 80 ஆண்டுகள் பொதுவாழ்வுக்கு உரியவர் கருணாநிதி. 
5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியே அடையாதவர்.  தமிழுக்கு அவர் செய்த பணிகளில் முக்கியமானது  2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுக் கொடுத்ததாகும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர். எந்த நேரத்திலும் மதச்சார்பற்றக் கொள்கையைக் கடைப்பிடித்தவர். 
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அரணாக இருந்தவர்.  1971 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் மத்தியில்  காங்கிரஸ் ஆட்சிக்கு அவர் கொடுத்த ஆதரவை மறக்கமாட்டோம். 
காங்கிரஸ் - திமுக போராட வேண்டும்: அரசியல் சாசன சட்டத்தையும், ஜனநாயக நிறுவனங்களை  மத்திய பாஜக அரசு சீரழிப்பதை எதிர்த்து நாம் வலுவாகப் போராடும் இந்த நேரத்தில், கருணாநிதி வாழும்போது காங்கிரஸூம் - திமுகவும் எப்படி ஒன்றாக இருந்ததோ, அதைப் போல இந்த அரசியல் போராட்டத்திலும் இரு கட்சிகளும் உறுதியாக இருந்து போராட வேண்டும் என்பது என் ஆசை. அதற்கான உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com