ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சாத்தியம் இல்லை: ராஜேந்திர பாலாஜி

"ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சாத்தியம் இல்லை: ராஜேந்திர பாலாஜி

"ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும். அதே நேரத்தில் ஆலையைத் திறக்க எவ்வித சாத்தியகூறுகளும் இல்லை' என பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்ததால் ஆலையைத் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எந்த முகாந்திரமும், சாத்திய கூறுகளும் கிடையாது. 
கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக முதல்வரின் உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்பட வாய்ப்பு இல்லை. இழப்பீடு வழங்குவதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை. 
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்ல மாட்டார்கள். இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அதுதான் உண்மையான அதிமுக. அங்கு தான் தொண்டர்கள் இருப்பார்கள். பிரிந்து சென்றவர்கள் தற்போது அதிமுகவுக்கு திரும்ப விரும்புகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனிப்பட்ட காரணத்துக்காக திமுக வுக்கு சென்றுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக தமிழக ஆளுநருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆகவே 7 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com