மேடை மெல்லிசைக் குழுவையும் அங்கீகரிக்க அரசு பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்தைப் போன்று, மேடை மெல்லிசைக் குழுவையும் அங்கீகரிக்க அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் எடப்பாடி
சென்னையில் திருவையாறு 14-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தவில் இசை கலைஞர் ஏ.கே.பழனிவேலுக்கு இசை ஆழ்வார் விருதை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
சென்னையில் திருவையாறு 14-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தவில் இசை கலைஞர் ஏ.கே.பழனிவேலுக்கு இசை ஆழ்வார் விருதை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 


கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்தைப் போன்று, மேடை மெல்லிசைக் குழுவையும் அங்கீகரிக்க அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சென்னையில் திருவையாறு 14-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்துப் பேசியது:
இசை என்பது மனித குலத்துக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், அது இரண்டறக் கலந்திருக்கிறது. இசையில் எத்தனை வகை இருந்தாலும், அது நாடு, இனம், மொழி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து ஒருங்கிணைக்கும் சக்தி கொண்டதாக விளங்குகிறது. மனம் மகிழ்ச்சியடைவதற்கும், உடல் ஆரோக்கியத்துக்கும், தெய்வ வழிபாட்டுக்கும், தேச பக்திக்கும் மக்களின் மனங்களை இணைப்பதற்கும் ஒரு பாலமாகவே இசை பயன்பட்டு வருகிறது.
கர்நாடக சங்கீதப் பயிற்சி: கர்நாடக இசை என்றால் அது நமக்கில்லை என தூரச் சென்ற காலம் மலையேறி, இன்று வீட்டுக்கு வீடு தங்கள் குழந்தைகளை கர்நாடக சங்கீதப் பயிற்சியில் சேர்த்து விடுவதைப் பார்க்க முடிகிறது. தொடக்கக் காலத்தில் திரைத் துறையில் பாடல்கள் அனைத்தும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே பாடப்பட்டன. பின்னர் எம்.ஜி.ஆரும் தனது திரைப்படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும், இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருவரும் எண்ணற்ற திட்டங்களை தங்களது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திக் காட்டினர்.
மெல்லிசைக் குழுவுக்கு அங்கீகாரம்: இந்த விழாவுக்கு என்னை அழைத்த போது, மெல்லிசைக் குழுவையும் அரசு அங்கீகரித்த துறையாக அறிவிக்க வேண்டுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்த விழாவில், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முழுஉருவ மெழுகுச் சிலையை பழம்பெரும் நடிகை சரோஜாதேவி திறந்து வைத்தார். இசை ஆழ்வார் விருது, தவில் வித்வான் ஏ.கே.பழனிவேலுவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை லஷ்மண் ஸ்ருதி நிர்வாகிகள் ராம், லட்சுமணன் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com