ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை  நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு  

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை  நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை  நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு  

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை  நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலமாகவும், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலும் மருந்துகள் விற்பனை செய்வது சட்டவிரோதம். இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு போலியான, தவறான மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படும். சரியான மருந்து கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழி மருந்து விற்பனை உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, ஆன்லைன் மருந்து விற்பனையை சட்ட விரோதம் என அறிவித்து, வழக்கு முடியும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முறையான உரிமம் மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்து பொருள்களை விற்பனைச் செய்ய தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்க வேண்டும். அந்த விதிகள் தொடர்பான அறிவிப்பை வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். அரசிதழில் விதிமுறைகள் வெளியிடப்பட்ட இரண்டு மாதத்துக்குள் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அதுவரை ஆன்லைன் வழியாக மருந்து விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை அமலில் இருக்கும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவை டிசம்பர் 20-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை  நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் வழியாக மருந்து விற்பனை செய்வோர், நீதிபதிகள் ராஜமாணிக்கம் மற்றும் சதயநாராயணன் அடங்கிய அமர்விடம் முறையிட்டனர். 

அதில் நீதிபதி புஷ்பா பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்யய இருப்பதால், அவரது உத்தரவிற்கு தடை கோரினர். அதன்படி ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை  நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com