ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்: கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்: கே.பாலகிருஷ்ணன்


சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது ஸ்டெர்லைட் விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து சி.வி.சண்முகத்துடன் பாலகிருஷ்ணன் பேசியதாகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரியதாக கூறப்படுகிறது. இதனிடையே  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என பாலகிருஷ்ணன் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com