குட்கா ஊழல் வழக்கு: மகள் திருமணத்துக்காக மாதவராவுக்கு ஒருவாரம் இடைக்கால ஜாமீன்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவுக்கு மகளின் திருமணத்துக்காக ஒருவார காலம் ஜாமீன் வழங்கி


குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவுக்கு மகளின் திருமணத்துக்காக ஒருவார காலம் ஜாமீன் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 6 பேரின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 26-ஆம் தேதியுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 6 பேரும் சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இவர்களின் நீதிமன்றக் காவலை வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 
இந்த நிலையில் தனது மகளுக்கு வரும் டிசம்பர் 29-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்றும் தனக்கு 10 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என மாதவராவ் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி திருநீலபிரசாத், மாதவராவுக்கு டிசம்பர் 26-ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் வரும் ஜனவரி 2-ஆம் தேதி மாதவராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com