ஜாமீன் மறுக்கப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து விடுவிப்பு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக  உத்தரவு

ஜாமீன் மறுக்கப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
ஜாமீன் மறுக்கப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து விடுவிப்பு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக  உத்தரவு

சென்னை: ஜாமீன் மறுக்கப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் சுனந்தா என்பவர், கார் மோதி மரணமடைந்தார்.  இதில் காரை ஓட்டி வந்த மதன் மற்றும் உடனிருந்த சரண் ஆகியஇருவரையும் போலீசார் கைது செய்து, வழக்குத் தொடர்ந்தனர்.  

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட இருவரும் எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு மரணமடைந்த வழக்கறிஞர் சுனந்தாவின் கணவர் சுரேந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  ஆனால் அவர்களிருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உடனே இதனை எதிர்த்து சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன் அதனை அவசர மனுவாக கருதி விசாரிக்கக் கோரினார். விசாரித்த நீதிமன்றமானது இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. 

ஆனால் நீதிமன்ற உத்தரவின் நகல் கையில் வழங்கப்படுவதற்கு முன்னால் , சைதாப்பேட்டை கிளைச்சிறை கண்காணிப்பாளர், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்து விட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து எழும்பூர் மாஜிஸ்திரேட் கோபிநாதன் மற்றும் சைதாப்பேட்டை கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஆகிய இருவர் மீதும் சுரேந்தர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடந்தார். 

அந்த மனுவானது வியாழனன்று நீதிபதிகள் வைத்யநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கினை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் மறுக்கப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், வெள்ளி மதியம் 02.15 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழும்பூர் மாஜிஸ்திரேட் கோபிநாதன் மற்றும் சைதாப்பேட்டை கிளைச்சிறை கண்காணிப்பாளர்ஆகிய இருவருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com