Enable Javscript for better performance
அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கும் பணி தீவிரம்

    By DIN  |   Published on : 09th February 2018 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mgr

    அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை பிப்ரவரி 24}ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இரு சக்கர மானியம் வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 24}ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
    இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட உள்ளது. இந்தச் சிலையை அமைப்பதற்காக பீடம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டும் பணிகள் அதிமுக அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அந்தச் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai