Enable Javscript for better performance
அரக்கோணம்-சென்னை இடையே 12 பெட்டிகளுடன் மின்சார ரயில் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம்-சென்னை இடையே 12 பெட்டிகளுடன் மின்சார ரயில் இயக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம்-சென்னை இடையே வியாழக்கிழமை முதல் 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில் இயக்கப்பட்டது.
    அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, வியாழக்கிழமை முதல் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு காலை 8.55, மதியம் 1.50, ஆகிய நேரங்களிலும், திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 11 மணிக்கும், சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 6.45, 11.05, மாலை 4 மணிக்கும், சென்னையில் இருந்து திருத்தணிக்கு இரவு 8.20-க்கும், ஆவடியில் இருந்து சென்னைக்கு காலை 5.25-க்கும், அரக்கோணத்தில் இருந்து ஆவடிக்கு இரவு 11.20-க்கு முதல் கட்டமாக 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்கப்படும்.
    இதன் தொடக்க விழா அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் தலைவர் நைனா மாசிலாமணி தலைமை வகித்தார். செயலாளர் ரகுநாதன் வரவேற்றார். காலை 8.55-க்கு புறப்பட இருந்த மின்சார ரயிலின் ஓட்டுநர் மற்றும் காப்பாளருக்கு பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டன. 
    இதைத் தொடர்ந்து, நைனா மாசிலாமணி பேசுகையில், ரயில் பயணிகள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொண்டதற்கும், இரவு 11.20-க்கு ஆவடிக்கு புதிய ரயிலை அறிமுகப்படுத்தியமைக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல் அரக்கோணம் ரயில் பயணிகளின் பல்வேறு கோரிக்கைகளையும் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai