Enable Javscript for better performance
ஆந்திரத்தில் பந்த்: தமிழக பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் பந்த்: தமிழக பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம்

    By DIN  |   Published on : 09th February 2018 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் வியாழக்கிழமை நடந்த பந்த் காரணமாக, தமிழகத்தில் இருந்து சுமார் 200 பேருந்துகள் வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை இயக்கப்படவில்லை. மாலையில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. 
    மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி, எதிர்க்கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆந்திராவில் பந்த் நடத்தினர். 
    இதனால் தமிழக எல்லையைக் கடந்து ஆந்திர மாநிலத்துக்குள் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்டவை வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை செல்லவில்லை.
    தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 200 பேருந்துகள் போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், மாலையில் அவை வழக்கம்போல் இயக்கப்பட்டதாகும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai