Enable Javscript for better performance
ஆளுநர் மாளிகையை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் மாளிகையை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

    By DIN  |   Published on : 09th February 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    secretariat

    தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை பொதுமக்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
    பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகையை பார்வையிட அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 9}ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம். பிப்ரவரி மாதம் முழுவதும் ஆளுநர் மாளிகையைப் பார்வையிடலாம்.
    பேட்டரியால் இயங்கும் வாகனத்தின் மூலம் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்படுவர். பதவியேற்பு விழாக்கள் நடைபெறும் தர்பார் அரங்கம், குடியரசுத் தலைவர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகை, மான்கள் நடமாடும் புல்வெளி, தமிழக ஆளுநரின் இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பிரதான கட்டடம், போலோ விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.
    சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் மூலம் பொதுமக்கள் ராஜ்பவனை ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க 
    விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவு செய்ய ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ஹத்க்ஷட்ஹஸ்ஹய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai