Enable Javscript for better performance
இந்திய விடுதலையின் தூண்டுகோல் சுவாமி விவேகானந்தர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய விடுதலையின் தூண்டுகோல் சுவாமி விவேகானந்தர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

    By DIN  |   Published on : 09th February 2018 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    purhoit

    சென்னை கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கெüதமான

    சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் இந்திய விடுதலைக்குத் தூண்டுகோலாக இருந்தன என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
    சென்னை விவேகானந்தர் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவேகானந்தர் நவராத்திரி விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது: 
    அமெரிக்காவின் சிகாகோவில் 1897-இல் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிவிட்டு நாடு திரும்பிய பிறகு, சென்னையில் உள்ள இந்த இல்லத்தில் 9 நாள்கள் தங்கி இருந்தார். இதை நினைவு கூறும் விதமாக "விவேகானந்தர் நவராத்திரி' விழா கொண்டாடப்படுகிறது. சகோதரி நிவேதிதாவும் ஒரு மாதம் இங்கு தங்கியிருந்து சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை விளக்கும் பணியை மேற்கொண்டார். மேலும், ராமகிருஷ்ண மடமும் இங்கு 10 ஆண்டுகள் செயல்பட்டது.
    இந்திய விடுதலையின் தூண்டுகோல்: அடிமைப்பட்டிருந்த நமது நாட்டின் விடுதலைக்கு விவேகானந்தரின் சுயசார்புக் கொள்கை தூண்டுதலாக இருந்தது. இந்தியர்கள் வெற்றியடையும் வரை எழுச்சியுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும், வாழ்க்கையில் துணிச்சலுடன் செயல்படுபவர்கள் தலைமைப் பண்பை பெறுவார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் தெரிவித்தார்.
    கல்வியே வறுமையை ஒழிக்கும்: கல்வியின் மூலமே வறுமையையும், துயரத்தையும் போக்க முடியும் என சுவாமி விவேகானந்தரும், சகோதரி நிவேதிதாவும் உறுதியாக நம்பினர். மக்களுக்கு தேசபக்தி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிக்காமலும், ஏழை, அடித்தட்டு மக்களிடம் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ளாத நாடு என்றைக்குமே வளர்ச்சி அடையாது என்றார்.
    அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், க. பாண்டியராஜன், ராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பிப்.14 வரை விழா: சென்னை விவேகானந்தர் இல்லத்தில் வரும் புதன்கிழமை (பிப். 14) வரை விவேகானந்தர் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai