Enable Javscript for better performance
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் 1 விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
    ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை 200}க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 7 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்து, மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை விரட்டியத்தனர்.
    இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகராஜன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர். படகில் இருந்த நாகராஜன், ரவி, சிவக்குமார், கார்த்திக் உள்ளிட்ட 7 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் இலங்கை காவல்துறையினர் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 7 பேரையும் நீதிபதி எம்.எம். ரியால் வரும் 16}ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் அதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த மீனவர்களையும் பிப்ரவரி 16}ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, 19 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai