Enable Javscript for better performance
கமலுடன் அரசியல் கூட்டணி: ரஜினிகாந்த் பதில்- Dinamani

சுடச்சுட

    
    rajinikanth

    கமலுனுடன் அரசியல் கூட்டணி வைப்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் இருவருமே ஒரே நேரத்தில் அரசியல் களம் காண தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் வார இதழ் ஒன்றில் தனது அரசியல் களம் குறித்து கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், ரஜினியுடன் இணைவது தொடர்பாக இப்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருவரின் கொள்கை, கோட்பாடுகள் தெரிந்த பின்னரே இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    இது குறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே வியாழக்கிழமை வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:- கமலுடன் இணைவதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பதிலை நான் ஏற்கெனவே சொல்லி விட்டேன். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில்தான் "சிஸ்டம்' சரியில்லை. முதலில் அதைத்தான் சரி செய்ய வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். "காலா' , "2.0' இரண்டு படங்களுமே வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் இரண்டு நாள்களில் தெரிந்து விடும் என்றார் ரஜினிகாந்த்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai