Enable Javscript for better performance
குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை கடித்து 4 வயது சிறுவன் சாவு- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை கடித்து 4 வயது சிறுவன் சாவு

    By DIN  |   Published on : 09th February 2018 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம், வால்பாறை அருகே குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை கடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
    வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட், வடக்கு டிவிஷனில் உள்ள குடியிருப்பில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முஷாரப் அலி, சுபியா தம்பதி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
    இந்நிலையில், சுபியா தனது 4 வயது மகன் சைதுலை வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் குளிக்க வைத்து, குளியலறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். அப்போது குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை சைதுலை வாயில் கவ்வித் தூக்கிச் சென்றுள்ளது. 
    அதைப் பார்த்த சுபியா சப்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாகத் தேயிலைச் செடிகளுக்கிடையே சைதுலைத் தேடத் தொடங்கினர். தகவலறிந்த வனத் துறையினர், காவல்துறையினர் மற்றும் வால்பாறை பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்களும் அங்கு சென்று சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    சுமார் ஒன்றரை மணி நேரத் தேடலுக்குப் பின், அருகில் உள்ள ஒரு புதரில் சிறுவனின் உடல், தலைப் பகுதி தனித் தனியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் கழுத்துப் பகுதியை கவ்வி சென்ற சிறுத்தை, கழுத்தை கடித்து ரத்தம் முழுவதையும் குடித்துள்ளது. சம்பவ இடத்துக்கு வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் நேரில் சென்று, உயிரிழந்த சிறுவன் சைதுலின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai