Enable Javscript for better performance
தனிமனித நலனை விட கோயில் பாதுகாப்பு முக்கியம்- Dinamani

சுடச்சுட

    
    shritemple

    மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட வந்த மன்னார்குடி செண்டு அழகிய ஜீயர்.

    பண்பாடு, கலாசாரத்தின் உறைவிடமாகத் திகழும் கோயில்களின் பாதுகாப்பு, தனிமனித நலனை விட முக்கியம் என மன்னார்குடி செண்டு அழகிய ஜீயர் கூறினார்.
    மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் அனைத்து இடங்களிலும் மரத்தால் ஆன கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சார அமைப்பும் பாதுகாப்பானதாக இல்லை. நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இதே நிலையே உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கோயில்கள் பாதுகாப்பில் அஜாக்கிரதையாகவே செயல்படுகின்றனர்.
    மதுரை, பழனி போன்ற பெரிய கோயில்களை மையமாக வைத்து அவற்றுடன் சிறிய கோயில்களை இணைத்து பராமரிக்க சிறப்புக் குழுக்களை ஏற்படுத்துவது அவசியம். கோயில் கடைகளில் ஆன்மிக பொருள்களைத் தவிர மற்றவை விற்கக் கூடாது. கோயிலில் கடை அமைப்போருக்கு வழங்கப்படும் உரிமத்தில், தேவைப்பட்டால் அவற்றை நீக்கலாம் என கோயில் நிர்வாகத்துக்கு அதிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கோயில் நிர்வாகம் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடைகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். இந்துக்களுக்கே கடைகள் தரப்பட வேண்டும். அவர்களுக்குத் தான் கோயில் பண்பாட்டு நடைமுறை தெரியும். கோயிலின் பாதுகாப்பு கருதி கடைக்காரர்களும் வெளியேற வேண்டும். தனிமனித நலனைவிட பண்பாடு, கலாசார உறைவிடமான கோயிலின் பாதுகாப்பு அவசியம். தமிழக கோயில்களில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவது சரியல்ல. எனவே மக்கள் வெள்ளிக்கிழமை மாலை வீடுகளில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai