Enable Javscript for better performance
தனியார் நிறுவன சொத்துகள்: சிறப்புக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவன சொத்துகள்: சிறப்புக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு

    By DIN  |   Published on : 09th February 2018 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் சொத்துகளை நீதிபதி தலைமையிலான சிறப்புக்குழுவிடம் ஒப்படைக்கவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் "டிஸ்க் அசட் லீட்' என்ற தனியார் நிறுவனம் 
    பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு, இந்த சொத்துக்களை விற்று 
    முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமார் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இதன்படி சொத்துக்களுக்கான அசல் ஆவணங்களை வழங்க நிறுவனத்தின் 
    இயக்குநர்களுக்கு கடந்த டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீûஸ எதிர்த்து நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் உமாசங்கர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 
    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அந்த நிறுவனத்தின் சொத்துகளை சிறப்புக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். 
    அத்துடன் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டு, மனுவைத் தளளுபடி செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai