Enable Javscript for better performance
மெய்யப்பன் அறக்கட்டளை வழங்கும் தமிழறிஞர் விருது- Dinamani

சுடச்சுட

    

    மணிவாசகர் பதிப்பக நிறுவனர் ச.மெய்யப்பன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழறிஞர் விருது மற்றும் சிறந்த நூலாசிரியர், சிறந்த பதிப்பகத்தார் என மூன்று வகையாக விருதுகள் வழங்கப்படுகின்றன. 
    தமிழறிஞர் விருதுக்கு ரூ.10,000 பரிசு, சிறந்த தமிழ் நூல்களை எழுதிய நூலாசிரியர் இருவருக்கு தலா ரூ.5,000, சிறந்த பதிப்பகத்தார் இருவருக்கு தலா ரூ. 2,500 பரிசுகள் வழங்கப்படும். மொத்த பரிசுத் தொகை ரூ. 25,000 ஆகும்.
    பரிசுக்கான விதிமுறைகள்: 2017-ஆம் ஆண்டில் வெளிவந்த முதற்பதிப்பு நூல்களை மட்டும் அனுப்ப வேண்டும். நூலின் மூன்று பிரதிகளை அனுப்ப வேண்டும். நூல் ஆசிரியரோ அல்லது பதிப்பகத்தாரோ நூல்களை அனுப்பலாம். 
    வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நூல்கள் வந்துசேர வேண்டும்.
    மணிவாசகர் பதிப்பக நிறுவனர் ச. மெய்யப்பனின் பிறந்த நாளான வரும் ஜூன் 21 விருதும், பரிசுகளும் வழங்கப்படும்.
    நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai