Enable Javscript for better performance
ரூ. 60 கோடி மதிப்பில் 4 மாவட்டங்களில் மண்டல புற்றுநோய் மையங்கள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 60 கோடி மதிப்பில் 4 மாவட்டங்களில் மண்டல புற்றுநோய் மையங்கள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

    By DIN  |   Published on : 09th February 2018 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 60 கோடி மதிப்பில் மண்டல புற்றுநோய் மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
    சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பலூன்களை பறக்க விட்டு, பேரணியைத் தொடங்கி வைத்தார். மேலும், அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை வார்டில் உள்ள இன்னிசை 
    சிகிச்சைப் பிரிவைப் பார்வையிட்டு, அங்குள்ள நோயாளிகளுக்கு சத்துணவுப் பொட்டலகங்களை வழங்கினார்.
    இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: அரசு புற்றுநோய் மருந்தியல் துறையில் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஊசி மருந்தும், புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறையில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான சிகிச்சையும், புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைத் துறையில் ரூ. 2 கோடி மதிப்பிலான கருவி மூலம் கதிரியக்க சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
    ரூ.60 கோடி மதிப்பில் மண்டல புற்றுநோய் மையங்கள்: தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 363 மருத்துவ நிலையங்களில் தொற்றாநோய்த் தடுப்பு சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1.64 கோடி பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும், 2 கோடி பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,203 துணை சுகாதார நிலையங்களில் ரூ. 14.66 கோடி மதிப்பில் தொற்றா நோய்கள் கண்டறியும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 
    அடையாறு புற்றுநோய் நிலையத்துடன் இணைந்து புற்றுநோய் பதிவேடை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இது புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் "பெட் ஸ்கேன்' மையமும் (டஉப நஇஅச இஉசபஉதந), சென்னை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 60 கோடி மதிப்பில் மண்டல புற்றுநோய் மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார். 
    இதில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் (பொ) டாக்டர் நாராயணபாபு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, புற்றுநோய் மருந்தியல் துறைத் தலைவர் டாக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai