சுடச்சுட

  
  amithsha1

   

  தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

  சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக-வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

  என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை  கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்.

  தமிழ் மொழியை ரயில் பயணச்சீட்டில் இடம்பெற செய்தது பாஜக ஆட்சிதான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்பாசனத்திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உட்பட பல மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு ரூ. 1.35 லட்சம் கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து பத்தாயிரம் கோடியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது. 

  வாரிசு அரசியல், ஊழலை மோடி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்குகிறது.  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம். 

  நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும். ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு

  தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலி, கிண்டல் செய்தனர். 2019 மார்ச்சுக்குள் தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என எதிர்ப்பாளர்கள் பார்ப்பார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai