சுடச்சுட

  

  நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது: மத்திய சுகாதார அமைச்சகம்

  By DIN  |   Published on : 10th June 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  terminatwe

  நிபா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி சௌபே தெரிவித்தார்.
  இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
  கேரளத்தில் நிபா வைரஸ் தாக்கத்தினால், 17 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக நிபா வைரஸால் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. நாட்டில் வேறு எங்கும் யாரும் நிபா வைரஸால் பாதிக்கப்படவில்லை. வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இது நல்ல சகுனமாகும். நிபா வைரஸ் தொற்று நோய் கிடையாது. அதனால், அந்த வைரûஸ கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார் அவர்.
  கேரளத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு திரும்பியுள்ள பலர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுவது குறித்த கேள்விக்கு சௌபே பதிலளிக்கையில், "கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த பகுதியில் சுகாதாரத் துறை குழு முகாமிட்டுள்ளது. அங்கு நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இதனால், கேரளத்தை விட்டு, நாட்டின் வேறு பகுதிக்கு ஓடத் தேவையில்லை' என்றார்.
  அவர் மேலும் கூறியதாவது:
  கேரளத்தில் நிபா வைரஸýக்கு உறவினர்களை பறிகொடுத்த நபர்களுக்கு, புணேயில் தனித்து ஓரிடத்தில் வைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அபாயக்கட்டத்தில் இருந்து வெளியே வந்து விட்டனர்.
  நிபா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு நடத்திய மத்திய குழு, நிபா வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவவில்லை என்றும், கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் மட்டுமே நிபா வைரஸ் பரவியுள்ளது என்றும் கூறியுள்ளது.
  இந்த நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதனால் நாட்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார் சௌபே.
  கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவியிருப்பதாக முதலில் செய்திகள் வெளி வந்தன. இதைத் தொடர்ந்து, கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் நிபா வைரஸ் பரவியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai