சுடச்சுட

  

  சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காதவா் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க இயலாது: அண்ணா பல்கலைக்கழகம்  

  By DIN  |   Published on : 13th June 2018 03:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anna university

   

  சென்னை: பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு வியாழக்கிழமையுடன் வெளி மையங்களில் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் பங்கேற்காதவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  பொறியியல் மாணவா் சோ்க்கையை இம்முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 2 ஆம் தேதியுடன் நிறைறவடைந்த நிலையில், விண்ணப்பித்த மாணவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபாா்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களிலும் ஜூன் 8 ஆம் தேதி முதல் தொடங்கியது.  இந்த சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னை மையத்தைத் தவிர மற்ற அனைத்து உதவி மையங்களிலும் வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

  பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவா்களில், இதுவரை அசல் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காதவா்கள் அருகில் உள்ள கலந்தாய்வு உதவி மையத்துக்கு வியாழக்கிழமை சென்று பங்கேற்கலாம். அவ்வாறு வியாழக்கிழமையன்றும் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க இயலாத மாணவா்கள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 17) எந்த நேரத்திலும் வந்து சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்கலாம். 

  இந்த இறுதி வாய்ப்பையும் தவறறவிட்டு, அசல் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காத மாணவ, மாணவிகள் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா். 

  சான்றிதழ் சரிபாா்ப்பு தொடா்பான சந்தேகங்களுக்கு 044 - 22359901, 22359920 ஆகிய தொலைபேசி எண்களில், தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அசல் சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்த ஓரிரு நாள்களில் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai