சுடச்சுட

  

  கடவுள் மறுப்புக் கொள்கையை திமுக கைவிட்டதா?: திமுக - அதிமுகவுக்கு இடையே விவாதம்

  By DIN  |   Published on : 14th June 2018 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடவுள் மறுப்புக் கொள்கையைத் திமுக கைவிட்டதா என்பது குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது.
  இந்து சமய அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பெரிய கருப்பன் பேசும்போது, கருணாநிதியை உற்சவமூர்த்தி எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
  அப்போது அமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டு, கருணாநிதி உற்சவமூர்த்தி என்று குறிப்பிடுகிறார். கடவுள் மறுப்புக் கொள்கையை திமுக கைவிட்டுவிட்டதா என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:
  பெரியகருப்பன்: அமைச்சர் ஏதாவது பேசி, அதை அவையில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். கருணாநிதி கோயிலுக்குப் போகாவிட்டாலும், இந்து சமய அறநிலையத் துறையில் சிறு தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் கருத்தாய் இருந்து அறிவுரைகள் வழங்கியவர்.
  அமைச்சர் ஜெயக்குமார்: திமுகவைப் போல எங்களுக்கு இரட்டை வேடம் போடத் தெரியாது.
  மு.க.ஸ்டாலின் (எதிர்க்கட்சித் தலைவர்): திமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கூறுகிறார். அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு அதிமுக போடும் இரட்டை வேடங்களை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
  ஜெயக்குமார்: நாங்கள் இரட்டை வேடம் எல்லாம் போடவில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் கொள்கை.
  அமைச்சர் செல்லூர் ராஜு: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதைத்தான் கடைப்பிடிக்கிறோம். அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்து வரலாற்றில் எப்போதும் மறந்துவிடாமல் காக்கச் செய்தவர் எம்ஜிஆர் என்றார்.
  அப்போது பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் இந்த விவகாரத்தை அத்துடன் விட்டுவிடுமாறு கூறினார். ஆனால், மு.க.ஸ்டாலின் எழுந்து பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
  அப்போது மு.க.ஸ்டாலின் கூறியது: இந்த விவகாரத்தை முதலில் எழுப்பியதே அமைச்சர் ஜெயக்குமார்தான். திமுக கொள்கை என்ன என்று கேட்கிறார். இது தொடர்பாக கருணாநிதி பராசக்தி படத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார். கோயில் கூடாது என்பதல்ல, கோயில் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்று கூறியுள்ளார். அதுதான் எங்கள் கொள்கை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai