சுடச்சுட

  

  9 சிறைகளில் ஜாமர் கருவிகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

  By DIN  |   Published on : 14th June 2018 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tn-sec

  தமிழகத்தில் 9 சிறைச்சாலைகளில் செல்லிடப்பேசி செயலிழப்பு ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
  மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவூட்டு மானியம் ரூ.900 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
  சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் புதன்கிழமை படித்தளித்த அறிக்கை:-சென்னை புழல் மத்திய சிறையின் இரண்டாம் பிரிவில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதிக்கும் வகையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். சிறைகளில் சிறைவாசிகள் செல்லிடப்பேசியை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஏற்கெனவே 9 மத்திய சிறைகளில் செல்லிடப்பேசி செயலிழக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  இதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் மத்திய சிறை-1 மற்றும் 2, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் 5 பெண்கள் தனிச்சிறைகளில் செல்லிடப்பேசியை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்.
  சமூக நலத் துறைக்கு புதிய கட்டடங்கள்: மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகக் கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டடம் ரூ.5 கோடியில் கட்டப்படும். தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 860 மையக் கட்டடங்களில் உள்ள பழுதுகளை நீக்கி சீர்படுத்த நிதி ஒதுக்கப்படும். 
  மதிப்பூதியம் உயர்வு: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ரூ.10,000-த்திலிருந்து ரூ.14,000-மாக ஆயிரமாக உயர்த்தப்படும்.
  ரூ.25,000 மானியம்: மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் விற்பனை மையம் அமைக்க செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் மானியமாக அளிக்கப்படும். இந்த நிதி முதல் கட்டமாக 100 பேருக்கு கொடுக்கப்படும்.
  மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் சிறப்புப் பள்ளிகள், இல்லங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உணவூட்டு மானியமானது ரூ.650-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai