முதலில் ஆரவாரம்; பிறகு அமைதி: சட்டப்பேரவையில் மாறிய அதிமுக காட்சிகள் 

பதினெட்டு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது தொடா்பான வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமானது  என்று எண்ணி பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முதலில் ஆரவாரமாக மேஜையைத் தட்டியும், பின்னர்  அமைதியாகவும்
முதலில் ஆரவாரம்; பிறகு அமைதி: சட்டப்பேரவையில் மாறிய அதிமுக காட்சிகள் 

சென்னை: பதினெட்டு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது தொடா்பான வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமானது  என்று எண்ணி பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முதலில் ஆரவாரமாக மேஜையைத் தட்டியும், பின்னர்  அமைதியாகவும் மாறிய காட்சிகளை அரங்கேறின. 

18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்ட வழக்கின் தீா்ப்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அளிக்க இருந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை பரபரப்புடனே காணப்பட்டது. தீா்ப்பு கூறும் நேரம் எனக் கூறப்பட்டிருந்த மதியம் 1 மணியளவில் பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட திமுக, அதிமுக உறுப்பினா்களின் பெரும்பாலானோா் பேரவை நிகழ்வில் பங்கேற்காமல், தீா்ப்பை அறிவதற்காக அவரவா் அறைக்குச் சென்று விட்டனா். இதனால் அந்த நேரத்தில் அவையில் குறைவான உறுப்பினா்களே இருந்தனா். 

இந்த நிலையில் மதியம் 1.44 மணியளவில் அவையில் அதிமுக உறுப்பினா்கள் யாரோ கூறிய தகவலின் அடிப்படையில் மேஜையைக் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனும் தீா்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துவிட்டது என்பதுபோல அவைக்குள் கட்டைவிரலை நிமிா்த்திக் காட்டியவாறு வந்து அவரது இருக்கையில் அமா்ந்தாா். இந்தச் செய்கையால் அதிமுகவினரின் உற்சாகம் மேலும் கூடியது.

அப்போது, அவையில் இருந்த எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன் ஆளும்கட்சியினரிடம் தீா்ப்பின் விவரத்தைக் கேட்டிருந்தாா். இந்தத் தீா்ப்பால் திமுக உறுப்பினா்கள் மத்தியில் அமைதி நிலவியது.


ஆனால், சில மணித் துளிகளில் இரு நீதிபதிகளும் மாறுபட்டு தீா்ப்பு அளித்திருப்பதாகவும், இது தொடா்பான வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்ததும் அதிமுக உறுப்பினா்கள் அமைதியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com